போலீஸ் சீருடையில் காதலனுடன் தனிமையில் சல்லாபம் புரிந்த பெண் காவலர் - வீடியோ

கோவையில் பெண் காவலர் ஒருவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக வளைதலங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். விசாரணையில் வீடியோவில் போலீஸ் சீருடையில் இருக்கும் பெண் போலீஸ் கோவை சோமனூர் காவல் நிலையத்தில் பணி செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். கோவையில் உள்ள காவல் நிலையம் ஒன்றிலேயே காவலர் தமது காதலனுடன் நெருக்கமாக இருந்ததாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் அது காவல் நிலையம் அல்ல காதலனுக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனம் என்பது பின்னர் தான் தெரியவந்தது. ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இருந்து கோவை மாவட்டம் விடுபடாத நிலையில் வெளியான பெண் காவலர் வீடியோ காவல் துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் சீருடையில் காதலனுடன் கொஞ்சி குளாவியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post