மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைதரி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது திரையுலக பயணம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், ஆரம்பத்தில் நான் படத்துக்கான ஆடிஷன்களுக்குச் சென்ற போது, பயப்படும்படி எதுவும் நடந்ததில்லை. ஏ சாலி ஜிந்தஹி படத்துக்காக ஆடிஷனுக்கு போனபோது மட்டும் முன்பின் தெரியாத ஒருவருடன் நெருக்கமாக இருக்கச் சொன்னார்கள்.
அவர் அந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த அருனோதய் சிங்.ஆரம்பத்தில் முன் பின் தெரியாதவருடன் நெருங்கிப் பழகுவது குறித்து யோசித்தேன். அப்போது அவர் ஹல்க் போன்ற தோற்றத்தில் இருந்தார். ஆனால் அவர் தன்னிடம் தன்மையாக நடந்து கொண்டார் என்றும் கூறினார்.
மேலும், தான் மணிரத்னத்தின் பாம்பே படத்தில் நடிகை மனிஷா கொய்ராலாவின் பாடல் மற்றும் நடனத்தைப் பார்த்துதான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனவும் கூறியுள்ளார்.


