இந்திய தடகள வீராங்கனை டூட்டீ சந்த், தனது தோழியுடன் சேர்ந்து வாழ
விரும்புவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மகளிர் 100 மீட்டர்,
200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு
இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் டூட்டீ சந்த். இவருக்கு 23 வயது ஆகின்றது.
தனது
உறவினரும் தோழியுமான 19 வயது கல்லூரி மாணவியுடன் சேர்ந்து வாழ
விரும்புவதாகவும், இதற்கு தனது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருவதாகவும் கூறியுள்ளார்.
ஓரின சேர்க்கையில் ஈடுபாடு உள்ளதாக
வெளிப்படையாகத் தெரிவித்த முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டீ சந்த்
தான் என்பது குறிப்பிடத்தக்கது.



