நடிகை ஹன்ஷிகா சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். 2011-ம்
ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமான இவர் கடகடவென வளர்ந்து விஜய், சூர்யா போன்ற
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தற்போது, ஹன்ஷிகாவின் மார்கெட்
காலியாகியுள்ளது.
புதிய படங்கள் வாய்ப்பு எதுவும் இல்லாமல்
இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமீபத்திய
புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இது, ரசிகர்களின் கவனத்தையும்
மீடியாவின் கவனத்தையும் தன் மீது வைத்திருக்க உதவும் என்று எண்ணுகிறார்.
இந்நிலையில்,
சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிதான்
கிடக்கிறார்கள். உடல் எடை குறைகிறேன் பேர்வழி என்ற பெயரில் அநியாயத்துக்கு
உடல் இளைத்து எழும்பும் தோலுமாக மாறிவிட்டார் ஹன்ஷிகா. கொளுக்கு மொழுக்கு
என இருந்த ஹன்ஷிகா இப்படி எழும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க சகிக்கவில்லை
என்று ரசிகர்கள் குமுறி வருகிறார்கள்.




