ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பூஜா ஹெக்டேவின் சம்பளம் குறித்து வெளியான செய்திக்கு இயக்குநர் ஹரிஷ் சங்கர் விளக்கமளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் வால்மீகி என்ற பெயரில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்தப் படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் அதர்வாவுக்கு முதல் தெலுங்குப் படமாகும்.
லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். அவருக்கு 15 நாட்கள் கால்ஷீட்டுக்காக ரூ.2 கோடி சம்பளம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திரைப்பட விழா ஒன்றிற்கு வந்த பூஜா படு கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.
அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.