பெங்களூரில் 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்த ரிச்சா பலோட், லம்கே (Lamhe) என்ற ஹிந்தி படத்தின் மூலம் 1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1997ம் ஆண்டு வெளிவந்த பர்தேஸ் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தன்னுடைய 16வது வயதில் மாடலிங் வாழ்க்கையை தொடங்கினார். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 2001-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு, அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், உனக்கும் எனக்கும் என ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு, போதுமான பட வாய்ப்புகள் இல்லாதாதால் நார்த் இந்தியாவுக்கே திரும்பினார் அம்மணி.
இவர் திருமணம் செய்து கொண்டாரா..? இல்லையா.? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. இணையத்தில் தேடினால் கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால், இருவருக்கும் எப்போது திருமணம் ஆனது..? எப்போது குழந்தை பெற்றுக்கொண்டார் என்ற எந்த விபரத்தையும் பார்க்க முடியாது.
ஆனால், இவர் ஃபர்தீன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.இருப்பினும், பொது இடங்களில் அம்மணி தனியாகவோ, அல்லது தன்னுடைய தோழிகள் புடை சூழவோ தான் அதிகம் தென்படுகிறார்.
இறுதியாக, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான "யாகவாராயினும் நா காக்க" என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன் பிறகு, என்ன ஆனார், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால், தோழிகளுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வபோது இணையத்தில் எட்டிப்பார்கின்றன.
Tags
Richa Palod