அடப்பாவிங்களா...! - அந்நியன் படத்தின் இந்த காட்சியை இப்படிதான் எடுத்தார்களா..?

அந்நியன் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். வசூலிலும் ரஜினி படங்களுக்கு இணையாக பல சாதனைகளை செய்தது.

இப்படத்தில் ப்ளாஷ்பேக் காட்சி ஒன்றில் ஒரு சிறுமி கரண்ட் ஒயர் விழுந்த தண்ணீரில் விழுந்து இறப்பது போல் காட்சி இருந்தது.

அப்போது அந்த சிறுமி என்னால் நடிக்கவே முடியாது, என்னுடைய பள்ளியில் கிண்டல் செய்வார்கள் என கூறினாராம்.

எவ்வளவு கெஞ்சியும் அவர் நடிக்க மறுத்ததால், அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் சம்மந்தப்பட்ட காட்சி ஒன்றை எடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதை கேட்ட எல்லோரும் அது எப்படி ஒரு குழந்தை அனுமதி இல்லாமல் இப்படி ஒரு காட்சியை எடுக்கலாம் என்று கண்டித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.