சினிமாவிற்கு வந்த புதிதில் அட்ஜெஸ்ட்மென்ட் - நடிகை ரெஜினா பரபரப்பு பேட்டி


சினிமாவுக்கு வரும் பெண்களிடம் கூறப்படும் அட்ஜெஸ்மென்ட் பற்றி பேசியுள்ளார் நடிகை ரெஜினா கசான்ட்ரா. கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னையை சேர்ந்த ரெஜினா கசான்ட்ரா. 

தமிழில் பெரிய அளவுக்கு வர முடியாமல் போன அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள பார்ட்டி, கள்ளபார்ட் மற்றும் ஏழு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் தன்னிடம் தகாத முறையில் பேசியதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் ரெஜினா ஒரு விவகாரம் பற்றி பேசியுள்ளார். சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்று தான் நடிக்க வந்த புதிதில் தன்னிடம் சிலர் கூறியதாகவும் அது அப்போது தனக்கு புரியவில்லை என்றும் ரெஜினா தெரிவித்துள்ளார். 

நடிக்க வந்தால் அட்ஜெஸ்மென்ட் பண்ண வேண்டும் என்பதை கேட்டு நான் புரியாமலேயே அதிர்ச்சி அடைந்தேன். அதிர்ச்சி அடைந்தாலும் மோசனமானதை எதிர்கொள்ளத் தயார் ஆனேன் என்று ரெஜினா கூறியுள்ளார். பிரபல நடிகையாக இருப்பதால் எதையும் தடுக்க முடியாது. யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை விட பெரிய ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்கிறார் ரெஜினா.