இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையான யாஷிகா ஆனந்த், பல படங்களில்
நடித்தபடி வேகமாக வளர்ந்து வருகிறார். அதோடு முன்னணி நடிகர்களுடன் நடிக்க
வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
அதனால்
அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து
வருகிறார். சமீபத்தில் அவரிடத்தில் ஒரு ரசிகர், எந்தெந்த தமிழ்
நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு
யாஷிகா ஆனந்த், அஜித்துடன் நடிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். அவர்
படத்தில் எந்தமாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன். ஆனால் அவருக்கு
தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். ஏனென்றால் அஜித் என் கனவு நாயகன் என்று
தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.


