விஜய் டிவி என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. இவர் சிரித்து கொண்டே தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இவர்
தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி அனைத்திற்குமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து
வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'எங்கிட்ட மோதாதே'
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் டிடி.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த
பின் பிரபலங்கள் கலந்து கொண்டு நடனமாடிய நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.
தற்போது விரைவில் துவங்க உள்ள 'எங்கிட்ட மோததே சீசன் 2' நிகழ்ச்சியில் டிடி
தொகுப்பாளராக ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இதுகுறித்து தற்போது
வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில், டிடி பல்லாக்கில் வந்து செம்ம மாஸ்ஸாக இந்தி
பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போடுவது வெளியாகியுள்ளது. இதற்கு நிகழ்ச்சி டிடி
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிது.
😍 The people's favourite anchor is back! 😍— Vijay Television (@vijaytelevision) May 17, 2019
எங்கிட்ட மோதாதே சீசன் 2 - வரும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகுது.. #EnkittaModhaadhe @DhivyaDharshini pic.twitter.com/QTLncNwKis


