பாடகர்கள் இப்போது எல்லா சினிமாவிலும் ஏராளம். ஆனால் அன்றைய
காலகட்டத்தில் அதாவது 80, 90களில் இருந்தவர்கள் எப்போதும் ரசிகர்கள் இடையே
ஸ்பெஷல் தான்.
அப்படி இன்றைய கால இளைஞர்களும் ரசித்து கேட்கக்கூடிய
ஒரு பாடகி என்றால் அது எஸ்.ஜானகி அவர்கள் தான். இனி பாட போவதில்லை என்று
கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
இவர் சமீபத்தில் மைசூரில் உள்ள
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளியல் அறையில்
வழுக்கி விழ அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனே
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது இவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.


