தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கலை. திறமைசாலிகளாக இருந்தும் சிலரால் தொடர்ந்து இங்கு படங்களைக் கொடுக்க முடியாது.
ஆனால், தோல்விகளைக் கொடுப்பவர்கள் கூட இங்கு தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களால் பொறமை மட்டும்தான் கொள்ள முடியும்.
முதல் படத்திலேயே தன்னுடைய தம்பியை ஹீரோவாக போட்டு வெற்றி என்ற தலைப்புடன் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றிப் படங்கள் இல்லை. ஆனாலும், தொடர்ந்து அவர் படங்களை இயக்கிக் கொண்டேயிருக்கிறார்.
தன் சொந்தக் கம்பெனி என சொல்லிக் கொண்டாலும் அதில் முதலீடு செய்யவும், இணைந்து தயாரிக்கவும் எப்படியோ சிலரை பிடித்துவிடுகிறார். அந்த ரகசியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பல இயக்குனர்கள் முயற்சிக்கிறார்களாம்.