IPL இறுதி ஆட்டத்தில் ரத்த காயத்துடன் 20 ஓவர் ஆடிய வாட்சன் - பிரபல நடிகர் பாராட்டு..!


IPL போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது. மிக பரபரப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தில் 80 ரன்கள் குவித்து கடைசி வரை போராடிய சென்னை அணி வீரர் ஷேன் வாட்சனின் இடது காலில் இரத்த காயம் ஏற்பட்ட விஷயம் தற்போது தான் தெரியவந்துள்ளது.

வாட்சனின் இந்த போராட்ட குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான ப்ரேம்ஜி வாட்சனை பாராட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.