தெய்வமகள் தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிராலமானவர் நடிகை வாணி போஜன். விளம்பர பட நடிகையாக ஒரு விளம்பரத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது இவரை பார்த்த தெய்வமகள் சீரியலின் இயக்குனர் இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த சீரியல் முடிந்து விட்ட நிலையில் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் வாணி போஜன். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நாடக மேடை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் கிடப்பில் இருக்கிறது.
இந்நிலையில், அவர் "4" என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை லோகேஷ் குமார் என்பவர் இயக்க மைக்கேல் என்பவர் ஹீரோவாக நடிக்கும் படம்.



