தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.
மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
முன்னதாக இன்று (19-06-2019) மாலை 6 மணிக்கு படத்தின் முக்கியமான அப்டேட் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர். அதன் படி, 21-ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இரவு 12 மணிக்கு இரண்டாவது போஸ்டரும் வெளியாகும் என குறிபிடப்பட்டுள்ளது.