தளபதி 63 படத்தின்விநியோக உரிமையை மிகப்பெரிய தொகைக்கு லபக்கிய நிறுவனம்...!

பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் "தளபதி 63" படத்தில், கேப்டன் மைக்கேல் என்ற பெயரில் அணியின் பயிற்சியாளராக நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ‘தளபதி 63’ படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதற்கு முன்பு, விஜய் – அட்லி – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் ஆடியோ உரிமத்தையும் சோனி நிறுவனம் தான் வாங்கியிருந்தது.


இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் தியேட்டர்கள் விநியோக உரிமையை பிரபல நிறுவனமான "Screen Scene" மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. மேலும், கேரள விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாகவும் நடிகர் மோகன்லால் அந்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிகின்றது. 

இன்னும் ஒரிரு நாட்களில் இந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என கூறுகிறார்கள்.