தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக "பிகில்" படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் 64 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர்.



