Posts

Showing posts with the label தளபதி 64 படத்தின் காதாநாயகி இவர் தான்

தளபதி 64 - விஜய்க்கு ஜோடியாகவுள்ள ரஜினி பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்

Image
நடிகர் விஜய் இப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் பெயர் அடிபட்டது.  ஆனால் இப்போது அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரஜினி பட நடிகை ஒருவர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.  இவர் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கத்தில் நடித்த பியாண்ட் தெ க்ளவுட்ஸ் படத்தின் மூலம் சர்வதேசக் கவனம் பெற்றார்.  அவர் வேறு யாருமல்ல, பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த "மாளவிகா மோகனன்" தான். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தளபதி 64 படத்தின் காதாநாயகி இவர் தான் - இதோ புகைப்படம்..!

Image
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக "பிகில்" படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் 64 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தப் படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறுகிறார்கள். இன்கேம் இன்கேம் காவலே என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடன் ஃபேவரைட் நடிகையாகி விட்ட ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Continue Reading...