"அடிச்ச பேட்டுக்கே இந்த நிலைமையா..? - அப்போ பேட்ஸ் மேன் நிலைமை.." - வைரலாகும் வீடியோ

சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதிய இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை லீக் சுற்றின் எட்டாவது போட்டியும், இந்திய அணிக்கான முதல் போட்டியாக நேற்று

முதலில் பேட்டிங்-கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை வெற்றி இலக்காக கொடுத்தது.

தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் தவான் 8 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் பொறுமையாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினர். போட்டியின் முடிவில் இந்திய அணி 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 122 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையின் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இப்போட்டியின் 4 -வது ஓவரை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வீசினார். அந்த ஓவரின் கடைசி எதிர் கொண்ட தவானின் பேட் உடைந்தது. இதனைத் தொடர்ந்து 8 ரன்னில் இருந்த போது ரபாடாவின் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.