நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஷாலினி பாண்டே கூட்டணியில் இயக்குனர் டான் சாண்டி இயக்கியுள்ள திரைப்படம் "கொரில்லா". இந்த படத்தில் நிஜ கொரில்லா ரக குரங்கு ஒன்று நடித்துள்ளது. இந்த படத்தை ஏன் பார்க்க கூடாது என்று பீட்டா அமைப்பு ஐந்து பாயிண்டுகளை அடுக்கியுள்ளது. அவை பின் வருமாறு,
1. குரங்குகளை அதன் தாயிடம் இருந்து பிரிக்கிறார்கள்.
2.சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் பயன்படுத்தப்படும் குரங்குகள் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. அந்த குரங்குகளை மோசமாக நடத்துகிறார்கள்.
3.பயிற்சியாளர்கள் அவ்வப்போது குரங்குகளை குத்துவது, எத்துவது, அடிப்பது, எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது என்று கொடுமைப்படுத்துகிறார்கள். குறைந்த டேக்குகளில் காட்சியை படமாக்க அவை துன்புறுத்தப்படுகின்றன.
4.படக் காட்சிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் விலங்குள் அதன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படுத்தப்படுகின்றன.
5.குரங்குகள் வளர்ந்த பிறகு அவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகும்போது அவற்றை கூண்டுகளில் அடைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.
ஒரு படத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு இப்படியான காரணங்களை அடுக்குகின்றது என்றால் படத்தில் அப்படி என்னதான் இருக்கும் என படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே, தமிழக மக்களுக்கும் பீட்டா அமைப்புக்கும் உள்ள வாய்க்கா தகராறு எல்லோரும் அறிந்ததே. இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரு படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறினால் சும்மாவா இருப்பார்கள்.
எது எப்படியோ, படத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்து விட்டது என குஷியில் உள்ளார்கள் படகுழுவினர்கள்.