தன்னுடைய பல்லாண்டு கால சாதனையை இந்தியாவிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலியா..! - குவியும் வாழ்த்து


உலகக்கோப்பை 2019 லீக் போட்டிகளில் இன்று இந்தியா அணி நடப்பு சேம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி வருகின்றது. 

டாஸ் வென்று பேட்டிங்கைதேர்வு செய்த இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே நாலா புறமும் பந்தை சிதறடித்து வந்தது. ஆனாலும், ஆஸ்திரேலிய அணியின் கடுமையான ஃபீல்டிங் காரணமாக ரன்கள் ஏறாமல் பார்த்துக்கொண்டது. 

ஆனால், சிக்கர் தவன் 117 ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு களத்திற்கு வந்த ஹர்டிக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கடகடவென உயர வழிவகுத்தார். ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 114 ரன்களை அதிரடியாக குவித்தது இந்திய அணி. 

இதில், குறிப்பிட வேண்டிய அதே சமயம் கொண்டாட வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை இதுவரை எந்த அணியின் கடந்தது கிடையாது. ஆனால், இன்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சிக்கர் தவன் ஆகியோர் அந்த சாதனையை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post