தமிழில் முன்னனி நடிகையாக உள்ள நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகின்றார். பல முன்னனி நடிகர்களின் விருப்பமான நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு என்றால் அது நயன்தாரா தான்.
தற்போது மிஸ்டர் லோக்கல், தர்பார், தளப்தி 63, சை ரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் நடித்த படங்களிலேயெ தனக்கு பிடிக்காத கதாபாத்திரம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘கஜினி’ படத்தில் வரும் மருத்துவ மாணவி சித்ரா வேடம் தான் என கூறியுள்ளார்.
முருகதாஸ் என்னிடம் சொன்ன கதை வேறு அவர் எடுத்துவைத்திருந்த கதை வேறு. படம் ரிலீஸ் ஆன பிறகு தான் எனக்கு இந்த விஷயமே தெரிய வந்தது என கூறியுள்ளார்.
Tags
Nayanthara