வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்ட நாவல் ஒன்றின் ஒரு பகுதியை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் அந்த மணியான இயக்குனர். படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று முடிந்து விட்டன.
படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் உலக அழகி நடிகை நடிக்கிறார். மேலும், படத்தின் கருவான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பெரிய நம்பர் நடிகையை அணுகியுள்ளார் இயக்குனர்.
ஆனால், அவ நடிக்கும் படத்துல எப்படி என்னை நடிக்க வைப்பீர்கள்...? நான் நடிக்க மாட்டேன் என்று கறாராக கூறி விட்டாராம். அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் நம்பர் நடிகை இப்படி கூறியிருப்பது குறித்து உச் கொட்டுகிறார்கள் நம்பருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
Tags
Gossip