அர்னால்டு - இந்த பெயருக்கே பலர் ரசிகர்கள். அமெரிக்காவின் முதல் பாடி பில்டர். மிஸ்டர்.ஒலிம்பியா டைட்டிலை 1970 முதல் 1975 வரை தொடர்சியாக ஐந்து வருடங்கள் வென்று சாதனை படைத்தவர்.
அந்த கால கட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்து முறை பாடி பில்டிங்கில் டைட்டில் அடிக்கவே ஹாலிவுட் சினிமா அவரை அப்படியே கொத்தி தூக்கிக்கொண்டது. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பிறகு சோலோ ஹீரோவாக களம் கண்டார் அர்னால்டு.
தற்போது அவரின் மகள் கேத்ரினுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மார்வெல் ஸ்டியோஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தில் நடித்தவர் கிறிஸ் பார்ட்.
இவர் ஜுராசிக் வேர்ல்டு மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நேற்று இவருக்கும் கேத்ரீனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கிறிஸ் பார்ட்டுக்கு இது 2 ம் திருமணம் ஆகும். மேலும், அவருக்கு ஜேக் பார்ட் என 6 வயதில் ஒரு மகன் இருப்பது குறிப்பிடதக்கது.