உலகக்கோப்பையில் மிகவும் சவாலான களத்தை இன்று ஜூன்.9ம் தேதி எதிர்நோக்கி இருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
நடப்பு உலககோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்பதால் சவாலான விஷயம் அல்ல. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானம் என்பது தான் இங்கே முக்கியமான சவாலான களம் என்று கூறுகிறோம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர் நோக்கி உள்ளது இந்தியா. ஒருவாரமாக நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை 2019 தொடர் போட்டிகளை பார்க்கும் போது, இங்கே முந்தைய சாதனைகளுக்கு வேலையே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு, இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒவ்வொரு மேட்சிலும் செமத்தியாக அடி வாங்கிய பாகிஸ்தான், இந்த உலகக் கோப்பையில் அதே இங்கிலாந்தை அதே இங்கிலாந்து மண்ணில் வைத்து வீழ்த்தி இருக்கிறது.
வங்கதேசம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துகிறது, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை துவம்சம் செய்கிறது (பயிற்சி போட்டி), நியூசிலாந்து இலங்கையை சின்னாபின்னமாக்கி வெற்றி பெறுகிறது, அதே இலங்கை கோப்பையை வெல்லும் ரேஸில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்துகிறது.
இங்கே ரெக்கார்ட்ஸ் பேசவில்லை. டிராக்ஸ் பேசுகிறது, பிட்ச் பேசுகிறது, இங்கிலாந்தின் வானிலை பேசுகிறது. இவற்றைப் பொறுத்தே அன்றைய நாளின் போட்டி முடிவுகள் அமைகிறது.
இந்த சூழலை குறிப்பிட்ட தினத்தில் எந்த அணி சரியாக பயன்படுத்துகிறதோ, அந்த அணிக்கே அன்று சுபம் போடப்படுகிறது. அது எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆக, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, இவற்றையெல்லாம் அறியாமல் இருக்குமா என்ன? ஆனால், அதையும் தாண்டி ஆறு பந்துகளை இந்தியா க்ளீயர் செய்ய வேண்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்ல…
முதல் விஷயம் : டேவிட் வார்னர்
இரண்டாவது விஷயம் : ஸ்டீவன் ஸ்மித்
மூன்றாவது விஷயம் : பும்ரா

நான்காவது விஷயம்: மிட்சல் ஸ்டார்க்
ஐந்தாவது விஷயம்: கென்னிங்டன் ஓவல் மைதானம்
ஆறாவது விஷயம்: அம்பயரிங்
மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆறு விஷயங்களையும் எப்படியாவது சாதுர்யமாக, திறமையாக நமது வீரர்கள் கடந்துவிட்டால் இந்தியாவின் வெற்றியை யாராலும் தடுத்த முடியாது!
Tags
World Cup 2019