நடிகை சிம்ரனின் மகன் எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க..! - ரசிகர்கள் ஷாக்.. ! -புகைப்படம் உள்ளே


இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து விட்டு, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் தமிழுக்கு வந்தவர் சிம்ரன். அந்த படத்தையடுத்து விஜபி, நேருக்கு நேர், வாலி என நடித்து தமிழில் கிடுகிடுவென வளர்ந்து நம்பர் ஒன் நடிகையாகி விட்டார் ஒல்லி இடுப்பழகி சிம்ரன். 

இருப்பினும், எல்லா நடிகைகளையும் போலவே அவருக்கும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது.ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார். வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், மாஜி ஹீரோயினிகளான ராதிகா, சரண்யா, ஊர்வசி, நதியா, ரம்யாகிருஷ்ணன் போன்றோருக்கு கிடைப்பது மாதிரியான அழுத்தமான வேடங்கள் அவருக்கு தரப்படவில்லை.

இந்நிலையில், தொடர்ந்து புதிய படவாய்ப்புகளுக்காக முயற்சித்துக்கொண்டே தான் இருக்கிறார் சிம்ரன். தற்போது தனது மூத்த மகன் அதீப்புடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார்.