உயிரை கொடுத்து காதலிக்கும் இளைஞர்கள் இருக்கும் இதே இடத்தில் தான் உயிரை கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகும் காமுகர்களும் வாழ்கிறார்கள்.
அப்படி ஒரு காமுகனை பற்றி தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். திருமணம் செய்து கொள்கிறேன் என்று இளம்பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி அவளை அனுபவித்துவிட்டு அந்தரத்தில் விட்ட கதை தான் இது.
மதுரை மாவட்டம் பேரையூர் என்ற பகுதியில்ல் வசிக்கும் பெண் ஒருவர் கல்லுப்பட்டியில்உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, அங்கு அடிக்கடி வரும் 24 வயதான அபிஷேக் என்பவனுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அவனுடன் படுக்கையை பகிரும் அளவுக்கு சென்றுள்ளார் இந்த பெண்.
அதன் பிறகு அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து தங்களின் இச்சையை தீர்த்துகொண்டு வந்துள்ளனர். மட்டுமின்றி, வெளியூர்களுக்கும் சென்று சரசம் புரிந்திருகின்றது இந்த காதல் ஜோடி.
பிறகு, சென்னையில் வேலை கிடைத்து சென்னைக்கே வந்துவிட்டார் அந்த பெண். ஆனால், அபிஷேக் அவளை விடாமல் சென்னைக்கு பல முறை வந்து நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பல முறை உறவு கொண்டுள்ளான். விளைவாக, இரண்டு உயிர் மூன்று உயிரானது.
இந்த விஷயத்தை அபிஷேக்கிடம் அந்த பெண் கூறவே,நம்முடைய பெயர் கெட்டுவிடும் என்று நாசுக்காக பேசி கற்பத்தை கலைக்க சொல்லியிருகிறார். அதன் பிறகு தான் பிரச்னையே, அதன் பிறகு அபிஷேக்கிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் கேட்டபோது அவன் அதற்கு மறுத்துள்ளதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டால் தன்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான்.
இதையடுத்து மனமுடைந்த அப்பெண் பேரையூர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார்.
அப்பெண் அளித்த புகாரின் பேரில் அபிஷேக் மற்றும் அவரது தந்தை நாகராஜ் தாய் ஜானகி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.