பிரபல நடிகை கிரீஸ் கர்னாட் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என இந்தியாவில் உள்ள பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் Girish Karnad.

பெங்களூருவில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவருக்கு இப்போது 81 வயது ஆகின்றது.

அண்மை காலமாக உடல் நல குறைவால் பதிக்கபட்டிருந்த இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 6:30 மணிக்கு அவரது உயிர் பிரிந்து விட்டது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மரண செய்தி வந்ததையடுத்து அவரது  ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.