"எல்லா இயக்குனர்களுக்கும் புரியாது.." - சொன்னா புரியாது நடிகை கூறிய தகவல்..!

 
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்றில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா காஷ்யப். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.
ஆனால், அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அம்மணி. இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான் கண்ணே கலைமானே படம் வெளியான நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 
அதில் அவர் பேசுகையில், ஒரு பெண் சினிமா இண்டஸ்ரிக்குள் நீண்ட காலம் இருப்பது மிக கடினம். ஏன் இருக்கவே முடியாது என்று கூட சொல்லலாம். நயன்தாரா மேம் எல்லாம் எப்படி தான் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 
இப்போதாவது பரவாயில்லை, இதற்கு முன்பெல்லாம் பட ஷூட்டிங் நடக்கிறது என்றால் அங்கு 100 ஆண்கள் இருப்பார்கள், ஆனால் நடிகை, நடிகை அம்மா என இரு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க. 
காடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது நம்முடன் நடிகைகளும் வருகிறார்கள். அவர்களுக்கு என்று எல்லாம் தேவை என எல்லா தயாரிப்பாளர்களும் யோசிப்பதில்லை. கடினமான நேரங்களில் நாங்கள் இயக்குனரிடம் விஷயத்தை எடுத்து கூறினாலும் அது எல்லா இயக்குனர்களுக்கும் புரியாது என்று கூறியுள்ளார்.