அஜித் ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார். இதற்கு காரணம், அவரை பற்றி வெளியாகும் செய்திகள் மற்றும் அவருடன் பழகிய பிரபலங்கள் தரும் பேட்டிகள்.
அது எப்படி சொல்லி வைத்தார் போல அவருடன் பழகிய எல்லா பிரபலங்களும் அஜித்தை ஆஹா..! ஓஹோ..! என்று புகழ்கிறார்கள். அப்படியெனில், நிச்சயம் அது உண்மையாக தான் இருக்க முடியும். பொதுவாக எல்லா பிரபலங்களும் அஜித்தை பற்றி கூறுவது இரண்டே விஷயம் தான் ஒன்று எளிமை மற்றொன்று அனைவரையும் மதிப்பது.
அஜித்திற்கு நெருக்கமானவர்கள் இன்னும் நிறைய கூறுவார்கள். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தற்போது, பிரபல நடிகர் வெங்கட் சுபா ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அஜித் மூன்று பேரை ஏமாற்றவே மாட்டார். ஒன்று அரசாங்கம், இரண்டு தயாரிப்பாளர், மூன்றாவது அவரது ரசிகர்கள். இந்த மூன்று விஷயத்தில் அஜித் எப்போதுமே மிக கவனமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
Tags
Ajithkumar