மறுமணம் செய்து வைக்க துடிக்கும் பெற்றோகள் - டேக்கா கொடுத்து விட்டு பறக்கும் நடிகை..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார் அந்த விவாகரத்தான நடிகை. இயக்குனர் ஒருவரை காதலித்தார். காதலித்த வேகத்தில் திருமணமும் செய்து கொண்டார். திருமணம் செய்த வேகத்தில் விவாகரத்தும் பெற்றுவிட்டார். 

இப்படி படு ஸ்பீடாக ஓடி முடிந்தது அம்மணியின் திருமண வாழ்க்கை. தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மலை, காடு, கடல் என சுற்றுலா சென்று விடுகிறார். 

சமீபத்தில் இவர் நடித்துள்ள படத்தில் இவர் அணிந்திருந்த ஆடையை பார்த்து ஷாக் ஆகாத ரசிகர்களே இல்லை. அந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டார் நடிகை. 

இப்படியே பண்ணிட்டு இருக்கே இந்த பொண்ணு என்று விரக்தியான பெற்றோர்கள் மறுமணம் செய்து வைக்கலாம் என்று பேச்சை எடுத்தாலே டேக்கா கொடுத்து விட்டு ஓடிவிடுகிறாராம் நடிகை. நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். எனக்கு திருமணமும் வேண்டாம், மறுமணமும் வேண்டாம். 

மீண்டும் ஒரு பிரிவை தாங்கும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை எனவும், மறுமணம் செய்துகொண்டாலும் நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். என்னை மறுமணம் செய்து கொண்டவருக்கும் இருக்கும் என பதிலளிகிறாராம். 

மன அழுத்தத்தில் இருப்பதால் தான் இப்படி பேசுகிறாய் என்று பெற்றோர்கள் கூறியும் கேட்க மறுக்கிறாராம் நடிகை. இதனால், நடிகையுடன் நெருக்கமாக பழகக்கூடிய உறவினர்கள் சிலரை வைத்து பேச வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம் பெற்றோர்கள்.