Actress Pooja hegde increased her salary :
நடிகர் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெடக்டே. ஆனால், இந்த படத்தின் தோல்வியால் தமிழில் வாய்ப்புகள் வராமல் போனது. இதனால், தெலுங்கு சினிமா சென்றார்.
ஆனால், அங்கேயும் இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவின, இறுதியாக ஹிந்தி சினிமா சென்றார், அங்கோ இவர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்தது.
எல்லோரும் ராசி இல்லாத ஹீரோயின் என்று நினைக்க, பிறகு கவர்ச்சியை கையில் எடுத்தார் அம்மணி. மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கின. இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக மகரிஷி என்ற படத்தில் நடித்தார் படமும் படு மாசான ஹிட் ஆகியுள்ளது.
இதனால், மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் பூஜா தனது சம்பளத்தை கிடுகிடுவென ரூ 2 கோடியாக உயர்த்தியுள்ளார். இதனால், தயாரிப்பாளர்கள் கிடுக் ஆகி கிடக்கிறார்கள்.


