நடிகை சினேகா என்றால் அந்த ஒரு அழகான சிரிப்பு தான் நினைவிற்கு வரும்.
அஜித், விஜய் முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வந்தார். அவருக்கென ஒரு
தனி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கின்றது.
நடிகர் பிரசன்னாவை காதலித்து
திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர் நடித்த படங்களில் முக்கியமான படம் புதுப்பேட்டை. இந்த படத்தை விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சினேகா. படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பாலாசிங் நடிகை சினேகாவை கடுமையாக தாக்குவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
இந்த காட்சியின் படப்பிடிப்பின் போது அதிகப்படியான டேக் வாங்கிவிட்டேன் என்றும், ஒரு கட்டத்தில் சினேகாவின் வயிற்றில் நிஜமாகவே ஓங்கி மிதித்துவிட்டேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் பாலாசிங்.
Tags
Actress Sneha