தமிழில் சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவனர் நடிகை வேகா டமோட்டியா. அதன் பிறகு பசங்க படத்தில் இளமை ததும்பும் "ஷோபிக்கண்னு" என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் போனார்.
தற்போது அங்கு பிஸி நடிகையாக இருக்கும் வேகா, ஹேப்பி டேஸ் நாயகன் வருண் சந்தோஷ் ஜோடியாக புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு பசங்க படம் ரொம்ப பிடித்திருந்தது.
அது மாதிரியான கதையம்சத்துடன் கூடிய படத்தில்தான் இப்போது கமிட் ஆகியிருக்கிறேன். தமிழிலும் என் வயதுக்கு கேரக்டர் அமைந்தால் நடிப்பேன், என்று கூறியுள்ளார்.
மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி நம்ம ஷோபிக்கண்னா இது..? என்று ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
Tags
Actress Vega Tamotia