தமிழ் திரைப்படங்களில் நடித்து தற்போது டிவி சீரியல்களில் நடித்துவரும் நந்தினி, டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நந்தினி.
இவர் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல டி.வி. தொடரான சரவணன் மீனாட்சியில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலமாக அனைவராலும் மைனா என்று அழைக்கப்பட்டார்.
இவர் 2 வருடங்களுக்கு முன்புதான் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தியதாக கூறப்பட்டது. இது சின்னதிரை நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார்.
டிவி நடிகர் யோகேஷ்
இந்த நிலையில் நந்தினி என்ற மைனா தற்போது டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார். இவர் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் நடிகர்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருகிறோம். தற்போது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக மைனா கூறியுள்ளார்.
Tags
Maina Nadhini