அத்துமீறி அந்த இடங்களில் தொட்டு தடவினார் - பிரபல தயாரிப்பாளர் மீது மடோனா புகார்..!


பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகளும், தங்களை பலாத்காரம் செய்ததாக சில நடிகைகளும் தெரிவித்தனர்.

மேலும் சிலரோ, வெயின்ஸ்டீன் தங்களை கட்டாயப்படுத்தி ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் பிரபல அமெரிக்க பாடகி மடோனாவும் வெயின்ஸ்டீன் மீது புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மடோனா தி நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

1991ம் ஆண்டு ட்ரூத் ஆர் டேர் ஆவணப் படத்தை எடுத்தபோது வெயின்ஸ்டீன் என்னிடம் எல்லை தாண்டினார், அத்துமீறி அந்த இடங்களில் தொட்டு தடவினார். மேலும் நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது பாலியல் ரீதியாகவும் பேசினார். அப்பொழுது அவர் திருமணமானவர். எனக்கு அவர் மீது விருப்பமே இல்லை. அவர் என்னை போன்று பிற பெண்களிடமும் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்பது எனக்கு தெரியும் என்றார்.

மடோனாவின் இந்த குற்றச்சாட்டை ஹார்வி வெயின்ஸ்டீன் மறுத்துள்ளார். தங்களுக்கு இடையேயான உறவை மடோனா வேறு மாதிரியாக புரிந்து கொண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.