இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை 2019 போட்டியில் ராபின் ரவுண்ட் முறையில் நடக்கும் லீக் போட்டிகளில் இன்று ஜூன் 22-ம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.
இதுவரை, நான்கு போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 3 வெற்றியும் ஒரு போட்டியான நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, அந்த அணி ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறிவிட்டது எனலாம்.
5 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்றைய போட்டியில் மழைக்கு நிச்சயம் வாய்ப்பில்லை என்பதால், முழு ஆட்டத்தையும் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். ஆனால், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணி ரன்களை சேர்க்க திணறி வருகின்றது.
இன்றைய போட்டியில் நிச்சயம் 330 முதல் 370 ரன்களை இந்திய அணி எடுக்கும் என கணித்தார்கள் கிரிகெட் வல்லுனர்கள். ஆனால், ஆஃப்கானின் சுழற்பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் 200 ரன்களையே திக்கி திணறி தான் எட்டியது இந்திய அணி.



