ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் தான் தற்போது அஜித் நாயகனாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் ஒரு பாடல் பாடியது போன்று, நேர்கொண்ட பார்வையில் அஜித்தும் ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்தி பரவியது. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசையமைக்கும் யுவன்சங்கர் ராஜா அந்த செய்தியை மறுத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வையில் அஜித் பாட்டு பாடவில்லை. அமிதாப்பச்சன் பாடியது போன்று அஜித்தையும் பாட வைக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்யவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.