Posts

Showing posts with the label Nerkonda Paarvai

"நேர்கொண்ட பார்வை" தெலுங்கு ரீமேக் படத்தின் தலைப்பு இது தான்..!

Image
பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை டாப்சி நடித்து வெளிவந்த 'பிங்க்' திரைப்படம் இந்தியா முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தை தமிழில் நடிகர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க கடந்த வருடம் 'நேர் கொண்ட பார்வை' என்று ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்து சுமார் வெற்றியைப் பெற்றது.  இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க, படப்பிடிப்பும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் தனது கட்சி மூலம் தேர்தலில் நின்று தோல்வியுற்றார் பவன் கல்யாண்.  அதன்பின் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றார்கள். ஆனாலும், இந்தப் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க சம்மதம் வாங்கியதாக ஒரு தகவல் உண்டு.  இதனிடையே, படத்திற்கு 'வக்கீல் சாப்' எனப் பெயர் வைக்க உள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தில் படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளார்களாம். ஒரு இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் ரீஎன்ட்ரி என்பதால் படத்திற்கு இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ...

என்னது அஜித் படமா..? ஆனாலும், நடிக்க மாட்டேன் - வாய்பை மறுத்து விட்டு இப்போது கதறும் இளம் நடிகை

Image
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் குறைந்தபட்சம் இரண்டு திரைப்படங்களுக்கு மேல் வெளியாவது வழக்கம். ஆனால், இதில் ஆரோக்யமான விவாதத்தை, உரையாடலை ஏற்படுத்தும் படங்கள் மிகவும் சொற்பமாகவே வருகின்றன.  சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறுகிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்கள் பலரும் கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியது. அஜித் குமார் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமான படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலான படங்கள் சிலவே உள்ளன.  அந்த வகையில் முத்திரை பதிக்கும் படமாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் இருந்தது.இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சி என்றாலும் அட்டகாசமான, உணர்வுப்பூர்வமான, அழுத்தமான நடிப...

"நேர்கொண்ட பார்வை" ஓட்டம் முடிந்தது - HIT-ஆ..? BLOCK BUSTER-ஆ..? - இதோ இறுதி முடிவு..!

Image
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார்.  பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. நான்கு நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியது.  ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் ஓட்டம் கிட்ட தட்ட முடிந்து விட்டது.மல்டிஃப்லக்ஸ் மற்றும் 50-க்கும் குறைவான அரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில், இந்த படத்தின் முடிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாஸ் ஹீரோ என்...

"நேர்கொண்ட பார்வை" நாலு நாள் தான் ஓடியது - பிரபல ரஜினி பட இயக்குனர் விளாசல்..!

Image
தமிழ் சினிமாவுக்கு பெரிய சிக்கலாக இருப்பது வீடியோ திருட்டு என ஒரு கருத்து இருந்தாலும், தயாரிப்பாளர்களின் நஷ்டத்திற்கு மக்கள் தியேட்டர் பக்கம் வர யோசிப்பதும் ஒரு காரணம் என பேசியுள்ளார் பிரபல இயக்குனர். ஆர்.வி.உதயகுமார். மேலும் பேசிய அவர், "மக்கள் தியேட்டர் வரவேண்டும் என்றால் யார் நடித்திருக்கிறார்கள், என்ன இருக்கிறது என பார்த்து தான் வருகிறார்கள்.  ஆனால், தற்போது  உள்ள டாப் ஹீரோக்களின் படங்களுக்கே சில நேரங்களில் கூட்டம் வருவதில்லை. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கே நான்கு நாள் தான் ஓடியது. படம் பிடித்தால் தான் ஓடும்" என விளாசியுள்ளார். உண்மை என்னவென்றால் நேர்கொண்ட பார்வை 20 நாட்கள் கடந்தும் 300+ அரங்குகளில் ஓடிவரும் நிலையில் இவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆர்.வி.உதயகுமார் நடிகர் ரஜினின் எஜமான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நேர்கொண்ட பார்வை" படம் உண்மையிலேயே வசூல் செய்ததா..? - உண்மையை போட்டு உடைத்த பிரபல விநியோகஸ்தர்

Image
’No Means No’ என்ற வாசகத்தை தாங்கி வந்த 'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் உருமாறி இருக்கிறார். இப்படம் அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதனால், தான் படம் கமர்ஷியல் இல்லாமலும் நன்றாக ஓடியுள்ளது. இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படம் இந்த அளவுக்கு வசூல் செய்யும் என நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை, எந்த ஒரு மாஸ் எலமெண்டும் இல்லாமல் வந்தது.  இதனால் படம் படம் ஓடுமா..? அஜித் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என்று நினைத்தோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி படம் செம்ம வசூல் செய்துள்ளது. என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

20 நாட்களை கடந்துள்ள "நேர்கொண்ட பார்வை" படைத்துள்ள புதிய சாதனை - இது தெரியுமா..?

Image
பொதுவாக தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமையும் தவறாமல் குறைந்தது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் வெளியாவது வழக்கம். நாலு பாடல், நாலு சண்டைகாட்சிகள், கொஞ்சம் காமெடி, ஹீரோயின் கிளாமர், ஒன்றுக்கும் உதவாத ஒரு கதை. இப்படிதான் பல படங்கள் வெளியாகி முதல் மூன்று நாள் 50% அரங்கு நிறைந்தாலே போதும் லாபம் என்ற நோக்கில் வெளியாகி வருகின்றன.  ஆனால், இதில் ஆரோக்யமான விவாதத்தை, உரையாடலை ஏற்படுத்தும் படங்கள் மிகவும் சொற்பமாகவே வருகின்றன. சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறுகிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்கள் பலரும் கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அஜித் குமார் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமான படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலான படங்கள் சிலவே உள்ளன.  அந்த சில படங...

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அபிராமி வைத்த வேண்டுகோள் - பாடம் புகட்டிய அஜித்..!

Image
பிரபல விளம்பர பட நடிகை அபிராமி வெங்கடாசலம் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முழுதும் பயணிக்கும் இந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது.  ஆனால், படத்தில் நடித்து முடித்த அவர் படம் ரிலீஸ் ஆவதற்கு பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் மீது ரசிகர்கள் கடுமையாக கோபப்பட்டனர். வந்தவுடன் காதல் அது இது என்று இவரால் இருக்க முடிகிறது என்று விளாசினார். பிறகு உண்மை நிலவரத்தை அறிந்தவராக அடக்கி வாசித்தார். வெளியேறும் போது பெரிதாக எதிர்ப்புகள் எதையும் சம்பாதித்து கொள்ளாமல் சமத்து பெண்ணாக வெளியே வந்து விட்டார்.  வெளியே வந்ததும் நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் பார்த்தார் அபிராமி. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அபிராமி படப்பிடிப்பில் அஜித்துடன் நடித்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், நான் அஜித் சாரை எப்போதும் சார் சார் என்று தான் கூப்பிடுவேன். அவர் என்னையும் சக நடிகைகளையும் ஜி என்று தான் அழைப்பார். யாரையும், பேர் சொல்லி அழைக்க மாட்டார். ஒரு நாள் அவரிடம் சார் நீங்க என...

2019-ல் இதுவரை வெளியான படங்களில் வசூல் அடிப்படையில் TOP 5 இடத்தை பிடித்த படங்கள்..!

Image
இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே விஸ்வாசம், பேட்ட என இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களுடன் ரசிகர்களை வரவேற்த்தது தமிழ் சினிமா. வருடத்திற்கு 200+ படங்கள் கொடுக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் படங்கள் என்றால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.  பணம் இருக்கு, படம் எடுப்போம், நஷ்டக்கணக்கு காட்டி வரி கட்டுவதில் இருந்து எஸ்கேப் ஆவோம் என்று சில பல பண முதலைகளும், இந்த படத்தை தயாரித்தேன் அதன் மூலம் வந்த வருமானம் இது கருப்பு பணத்தை வெள்ளையடிக்க சில பண முதலைகளும் சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  ஐந்து கோடி, பத்து கோடி, ஐம்பது கோடி என பணத்தை கொட்டுகிறார்கள். வந்தால் லாபம், போனாலும் லாபம் தான். சினிமா தயாரிப்பாளர், நடிகர் என்ற அடையாளம் வேறு கிடைக்கிறது என்று பல முதலாளிகள் பணத்தை இறக்கி விளையாடுகிறார்கள்.  ஆனால், சினிமாவையே தொழிலாக வைத்துள்ள சில தயாரிப்பளர்கள் தான் நல்ல கதை மற்றும் ஹீரோவை தேர்வு செய்து லாபம் ஒன்றை நோக்கமாக கொண்டு ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் படங்களை தயாரிகிறார்கள். அப்படியான படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெறுகின்றன.  ...

படப்பிடிப்பு தளத்தில் அஜித் அடிக்கடி கூறும் ஒரு விஷயம் இது தான்..!

Image
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி, அஜித் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அபிராமி.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  வெளியே வந்ததும் தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்துக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தெரிந்து கொண்ட அபிராமி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், குறிப்பிடும் படியாக, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் எப்போதும்அவரது மகள் அனோஷ்கா-வின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு மகள் மீது பாசம் வைத்துள்ளார் அஜித் என்றுக...

நேர்கொண்ட பார்வை நான் ஸ்டாப் வசூல் வேட்டை - அஜித் புதிய சாதனை..!

Image
சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்ப்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படம் ஒரு விவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.  பெண் விலைமாதுவாகவோ, பல ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்த பெண்ணாகவோ, தோழியாகவே, காதலியாகவோ, ஏன் மனைவியாக இருந்தாலும் அவர் நோ என்று சொன்னால் நோ என்றே பொருள் என்பது படத்தின் மையக்கருத்து. இந்த படத்தை முற்போக்கு சிந்தனை என ஒரு தரப்பினரும், கலாசார சீரழிவு என ஒரு தரப்பினரும் பேசி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த படம் ஒருப்பக்கம்நான் ஸ்டாப் வசூலை செய்து வருகின்றது.  சென்னையில் மட்டும் இந்த படம் 12 நாட்களில் 9.88 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 12-வது நாளான நேற்று மட்டும் 18.26 லட்ச ரூபாய் வசூலித்துள்ள நிலையில் இன்று சென்னையில் மட்டும் 10 கோடி வசூல் என்ற இலக்கை எட்டி புதிய சாதனை படைக்கும் என கூறுகிறார்கள்.

பாக்ஸ் ஆஃபிஸ் கிங் - நிருபித்த அஜித் - நேர்கொண்ட பார்வை 10 நாள் வசூல்..! - அதிரடி ரிப்போர்ட்

Image
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  வெளியாகி பத்து நாட்களை நிறைவு செய்துள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டு மொத்த வசூல் நூற்று இருபது கோடியை தாண்டியுள்ள நிலையில் கடந்த ஏழு மாதத்தில் மட்டும் முன்னூறு கோடி ரூபாய் வர்த்தகத்தை அஜித் தனி ஆளாக நிகழ்த்தியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. போட்டிக்கு அதே தினத்தில் நடிகர் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படம் வெளியாகி இருந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் நூற்று எண்பது கோடி ரூபாயை வாரி சுருட்டியது இந்த திரைப்படம். ஆனால், தமிழகத்தில் பேட்ட திரைப்படத்தை காட்டிலும் அதிக வசூலை ஈட்டிய விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்த தொகை 135 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.  இதனை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் மட்டும் கடந்த...

சார் நான் அப்படியே தான் எடுப்பேன் - எஸ்கேப் ஆகவிருந்த வினோத்-தை மடக்கிய அஜித் - வெளிவராத தகவல்..!

Image
நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளியான இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர். முதல் படம் மகளின் பாசத்தை கருவாக கொண்ட விஸ்வாசம். இரண்டாவது, பெண்கள் சுதந்திரத்தில் உள்ள குறைகளை கருவாக கொண்ட "நேர்கொண்ட பார்வை".  விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்த அஜித் இயக்குனர் வினோத்தை அழைத்துள்ளார். நம்மிடம் கதை கேட்கத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து கொண்டு தன்னிடம் இருந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் வினோத்.  அந்த கதையை கூறியும் முடித்து விட்டார். ஆனால், அஜித் முதலில் பிங்க் படத்தை ரீமேக் பண்ணும். நீங்க தான் டைரக்ட் பண்றீங்க என்று கூறியுள்ளார் அஜித். திருதிருவென முழித்த வினோத். பண்ணலாம் சார், ஆனா நான் பிங்க் படத்தை அப்படியே தான் எடுப்பேன் அதில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை உங்களுக்கு ஒகே வா என்று கூறி எஸ்கேப் ஆக முயற்சி செய்துள்ளார்.  சரி வினோத் அப்படியே எடுங்க என்று கூறியுள்ளார். வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார் வினோத். அதன் பிறகு அஜித் கூறிய விஷயம் தான் வினோத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருகிறது. இந்த படம் முடிஞ்சதும் உங்க கதையில அடுத்த படம் பண்றோம் என...

வாவ்..! - நேர்கொண்ட பார்வையில் இடம் பெற்ற இந்த காட்சி அஜித் இயக்கிதா..? - செம்ம செம்ம..! - இதோ புகைப்படம்

Image
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். பிங்க் படத்தின் கதைக்கருவை வைத்துக் கொண்டு தமிழில் சிலமாற்றங்களை செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத்.  கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத இந்தக் கதையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடித்திருப்பது திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான இச்சமூகத்தின் பார்வையை திரையில் பேசிய அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற "அகலாதே" என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க அந்த பாடலின் வீடியோவை நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட...

நேர்கொண்ட பார்வை விமர்சித்த விமர்சகருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் நெத்தியடி பதில்..!

Image
வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்கிற கருத்தை பதிவு செய்த் பிங்க் திரைப்படம் பெற்ற அதே வரவேற்பை அதன் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை படமும் பெற்று வருகிறது.  அதிலும் அஜித் போன்ற உச்ச நடிகர் ஒருவர் சொன்னாதால் இன்னும் ரீச் ஆகியுள்ளது. படம் வெளியாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் நல்ல வசூலும் குவித்து வருகிறது இந்த படம். ஆனால் ஒரு சிலர் இந்த படம் பற்றி வேறு விதமாகவும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரு பிரபல விமர்சகர் NKP பற்றி மோசமாக விமர்சிக்க, அதை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த விமர்சகரை திட்டியுள்ளார்.  இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர். நேர்கொண்ட பார்வை ரசிகர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பதை காட்டத்தான் அவர் இதை பகிர்ந்துள்ளார். 

"நேர்கொண்ட பார்வை" படத்தை பார்க்க சென்று இந்த குடும்பத்தினர் செய்த கலவரத்தை பாத்தீங்களா..?

Image
அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.  தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. சென்னையில் மட்டும் முதல் 5 நாட்களில் இப்படம் 6.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படம் முதல் வார இறுதியில் வெளிநாட்டில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய மதிப்புபடி 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.  அதிகப்படியான பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படத்திற்கு சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் டிக்கெட் பரிசோகதர் சீட் நம்பர் என்ன என்று கேட்டுள்ளார். அவர்களும் E வரிசை என்று கூறியுள்ளனர். E வரிசைனு சொன்னா எப்படி..?  சீட் நம்பர் சொல்லுங்க என்ற கேட்ட டிக்கெட் பரிசோதகரிடம் E வரிசை முழுதும் நாங்க தான் யா..! என்று செய்த கலவரமான கலாய்ச்சல...

நேர்கொண்ட பார்வை ஐந்து நாள் வசூல் வேட்டை - அதிர்ந்த கோலிவுட் - லேட்டஸ் ரிப்போர்ட்

Image
நடிகர் அஜித் நடித்துள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.  சென்ற வாரம் வியாழக்கிழமை வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.  அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் "பக்ரீத்" விடுமுறை நாள் என்பதால் நேற்றும் ஒரு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.  லேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் நேர்கொண்ட பார்வை படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.  தொடர்ந்து ஐந்து நாட்கள் வசூல் வேட்டை நடத்தியுள்ள இந்த படம் இந்தியா தவிர உலக நாடுகளில் 2 மில்லியன் டாலர், அதாவது 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.  ஒரு ரீமேக் படம்வெளிநாடுகளில் வெளியாகி இவ்வளவு வசூலித்துள்ளது இது தான் முதன் முறை என்கிறார்கள் பாக்ஸ்ஆஃபிஸ் வட்டாரங்கள். #NerkondaPaarvai continues ...

"நேர்கொண்ட பார்வை படம் அஜித்தின் அந்த படத்தை விட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் இது நடந்துவிடும் " - வினோத் அதிரடி

Image
தமிழ் சினிமாவில் கமர்ஷியல், கமர்ஷியல் என இயக்குனர், நடிகர்கள் என ஒரே குட்டையில் மீன் பிடித்து வந்தனர். ஆனால், சதுரங்க வேட்டை, தீரன் போன்ற வித்தியாசமான படங்கள் இயக்கி ஹிட்டும் கொடுத்தார் இயக்குனர் எச்.வினோத்.  இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தினை இயக்கியுள்ளார். மிகவும் சென்சிட்டிவ்வான இந்த கதையை கையில் எடுத்து ஆபாசம், அருவருப்பு இல்லாமல் இயக்கு ஹிட்டும் ஆக்கிவிட்டார் மனுஷன்.  + மேலும், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்நிலையில், வினோத் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்றால் அதிகம் பணம் புழங்கும் ஒரு இடம். பிரபல ஹீரோக்கள் படமென்றால் திரையரங்கு உரிமையாளர் முதல் கேண்டினில் சமோசா விற்பவர், பார்கிங் ஏரியாவை குத்தைககைக்கு எடுத்தவர் வரை பலருக்கும் வருமானம் வருகிறது.  அதனால், டாப் ஹீரோக்கள் பலரும் கமர்ஷியல் கதையம்சம் கொண்ட படங்களை தான் தேர்வு செய்கின்றனர். ஆனால், நேர்கொண்ட பார்வை அந்த என்ன ஓட்டங்களை தகர்க்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும...

நான்காம் நாளில் எகிறிய வசூல் - உலக அளவில் நேர்கொண்ட பார்வை வசூல் நிலவரம்..! - ஹாட் அப்டேட்..!

Image
பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களின் ஆதாரமான உரிமைகளையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் திரைப்படம். 2016-ல் வெளியான பிங்க் என்கிற ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம்.  தமிழில் சில வணிக அம்சங்களை இணைத்திருந்தாலும் மூலத் திரைப்படத்தின் மையத்தைச் சிதைக்காமல் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். பெண்களின் இயல்பான சமிக்ஞைகளைக் கூடப் பாலியல் அழைப்பாகவும் காதலாகவும் கருதிக் கொண்டு பின்தொடர்ந்து துன்புறுத்தல்களைத் தரும் ஆண்களுக்கு மிகச் சரியான செய்தி இந்தத் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  இதற்கு உறுதுணையாக இருந்த அஜித்துக்கும் இயக்குநர் வினோத்திற்கும் பாராட்டு. ‘இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி இருக்கே.. அவங்க வேணாம்-னு சொன்னா.. வேணும்-னுதான் அர்த்தம்’ என்பது போல பல அபத்தமான கண்டுபிடிப்புகளும் முன்தீர்மானங்களும் ஆண்களிடம் இருக்கின்றன.  ‘அப்படியெல்லாம் அல்ல, ஒரு பெண் NO என்று சொன்னால் அதற்கு NO என்று மட்டுமே பொருள்.' என்கிற செய்தியை அழுத்தம் திருத்தமாக நெற்றியில் அடித்தாற் பே...

நேர்கொண்ட பார்வை - தமிழ்நாடு முழுதும் மூன்று நாள் வசூல்..! - லேட்டஸ்ட் ரிப்போர்ட்..!

Image
தல அஜித் எப்போதும் கிங் ஆப் ஓப்பனிங் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை ரிலிஸிற்கு முன்பே பல விவாதங்களை தொடங்கியது.  இது அஜித் படமே இல்லை. அவர் கேமியோ ரோலில் தான் தோன்றியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம், அது இது என்று எல்லோரும் பேசி வந்தனர். ஆனால், படத்தின் வசூல் சொன்னவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு மேல் தான் உள்ளது.  ஆம், நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் நேற்று வரை கொளுத்த வசூல் தான். 3-ம் நாள் சனிக்கிழமை நாளான நேற்று நேர்கொண்ட பார்வை படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.  இப்படம், மூன்று நாட்கள் முடிவில் 35 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், இன்று நான்காம் நாள்gஞாயிற்று கிழமை என்பதால் நிச்சயம் கடந்த மூன்று நாட்களை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த நடிகர் சூர்யா என்ன செய்துள்ளார் பாருங்க..!

Image
பிரபலமான நடிகர்கள் யார் நடிப்பில் எந்தப் படம் ரிலீசானாலும் சரி. ரிலீசாகும் நாளில், அவர்களுக்கு போனில் வாழ்த்து சொல்வதையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பொக்கே அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை சூர்யா.  ஆக., 8ல், உலகம் முழுவதும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான நேர் கொண்ட பார்வை படம் வெளியாகி இருக்கிறது. அதனால், அந்தப் படத்துக்கும்; அந்தப் படத்தில் நடித்த நடிகர் அஜித்தும் வாழ்த்துக் கடிதமும், பொக்கேயும் அனுப்பி இருக்கிறார் சூர்யா.  அதேபோல, இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வினோத்துக்கும் தன்னுடைய வாழ்த்துக் கடிதத்தையும்; பொக்கேவையும் அனுப்பியிருக்கிறார் நடிகர் சூர்யா.