இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் இளவயது பெண் ஒருவர் முன்பு இளைஞர் ஒருவர் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த இடத்திலேயே இளைஞரின் கன்னத்தில் பொளீர் என ஒரு அரை விட்டிருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இளம்பெண் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
இளம்பெண் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது பின்வருமாறு, அந்த மெட்ரோ ஸ்டேஷனின் எஸ்கலேட்டரில் இருந்து நான் வெளியே வந்தபோது, ஏதோ தவறு நடப்பதைப் போன்று உணர்ந்தேன். டக்கென திரும்பிப் பார்த்தேன்.
அப்போது, இளைஞர் ஒருவர் என்னைப் பார்த்த படி அவரது பேண்டை கழட்டி சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். நான் அவரது கன்னத்தில் அரை விட்டபோது, என்னை மோசமான வார்த்தைகளால் அவர் திட்டத் தொடங்கினார்.
இந்த காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தனர். நான் உதவி கேட்டு கத்தினேன். யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. மெட்ரோவை எண்ணி நான் அவமானம் அடைகிறேன். பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு மெட்ரோதான் சரியான இடம் என்று மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் இங்குதான் அருவருக்கத் தக்க சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் தேவையில்லை. பாதுகாப்பான பயணத்தை அரசு அளிக்க வேண்டும்.என்று அவர் கூறியுள்ளார்.