உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி தற்போது நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறது.
நீண்ட காலமாக ஜெர்சியின் நிறம் நீலமாகவே உள்ளது. இந்த அணியை Team Blue என்று தான் ரசிகர்கள் பலரும் அழைப்பார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஜெர்சியின் நிறம் மாறப்போகின்றது என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இன்று அதன் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகின.
இங்கிலாந்து-க்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியினர் புதிய ஜெர்சியை அணிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ளது. அந்த உடைகளில் நீல நிறமே அதிகமாக இடம்பெற்றிருநத்தது. தற்போது தான் ஆரஞ்சு நிறம் முக்கிய அங்கம் வகிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ இணையத்தில் வெளியான அந்த ஜெர்சி டிசைன்,




