என்னுடைய கை ஓட்டை கை - எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்க மாட்டேங்குது..! - இதோ இதை முயற்சி செய்யுங்கள்..!


இன்றைய சூழவில் பலருக்கும் பல பிரச்சனைகள். அதில் பிரதானமான ஒரு பிரச்சனை என்றால் அது பணமாக தான் இருக்கும். மாசம் 20 ஆயிரம் சம்பாதிக்குறேன் கையில் காசு தங்கமாட்டேங்குது. மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்குறேன் கையில் காசு நிக்க மாட்டேங்குது என்பது தான் பலரது குழப்பமும்.

காசு வருது எங்கே போகு எப்படி போகுது என்றே தெரியவில்லை என்று பலரும் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். பின்வரும் சில வழிமுறைகளை பின் பற்றினால் விரைவில் அப்படியான புலம்பலில் இருந்து நாம் தப்பிக்கலாம். 

அத சொல்லுங்க மொதல்ல என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. சரி வாங்க பாக்கலாம். முதலில், பணத்திற்கு தர வேண்டிய மரியாதையை நீங்கள் தருகிறீர்களா..? என்பது யோசித்து பாருங்கள். பணத்தை எப்படி கையாள வேண்டுமோ அப்படிதான் கையாள வேண்டும். ஏனோ தானோ என்று கையாள கூடாது. 

அது வெறும் கலர் பேப்பர் சார். மனுஷனுக்கு இல்லாத மரியாத அந்த பேப்பருக்கு என்ன சார் என்று வித்தாரம் பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது நண்பா.ஒருமனிதனை காட்டி மளிகை கடையில் ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா நம்மால்...? முடியாது. 

அதுவே அந்த கலர் பேப்பர் இருந்தால் அரிசி நம்மை வந்து சேரும். பணம் என்பது கலர் பேப்பர் அல்லது நம் அறிவையும், உடலையும் வைத்து உழைக்கும் அந்த உழைப்பின் மறு உருவம் என்பதை நீங்கள் ஆழ் மனதில் நன்கு புரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பணத்தை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு என்றால் அதை விட முக்கியமானது அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது தான். வாங்க.. எப்படி பணத்தை கையாளுவது என்று பார்க்கலாம்.