தல அஜித்திற்கு எப்படியான முரட்டு தனமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் அஜித்.
மன்றங்கள் இல்லை. கொடி இல்லை. பொதுவெளிகளில் தோன்றுவது கிடையவே கிடையாது. வீடு விட்டால் வேலை. வேலை விட்டால் வீடு என சாதரண மனிதன் போலவே அஜித் இருப்பது பலருக்கும் ஆச்சரியம். திரைத்துறையில் உள்ளவர்கள் ஒரு படத்தில் நடித்து விட்டாலே போதும் அவர்கள் அடிக்கும் அலப்பறைக்கு அளவே இருக்காது.
ஆனால், பிரம்மாண்டமான ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு நடிகர் அஜித் அமைதியாகவே இருக்கிறார். இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் தனது பேருந்தின் நாலா புறமும் விஸ்வாசம் படத்தின் அஜித்தின் புகைப்படங்களை வரைந்து அஜித் ரசிகர்களே பொறாமைப்படும் அளவுக்கு தனது விஸ்வாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாருங்க.






