நான் அந்த படத்தில் நடிக்கிறேனா..? யார் சொன்னது..? - நடிகை சாய் பல்லவி பளீர்


பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் இன்னொரு பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நாயகர்களாக நடிக்கிறார்கள். சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் அலியாபட், அஜய்தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருந்த பிரிட்டன் நடிகை எட்கர் ஜோன்ஸ், திடீரென்று விலகியதால் அவருக்கு பதிலாக மாற்று நாயகியை தேடி வந்தனர். இவர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை சாய்பல்லவி மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் சாய் பல்லவி கூறியிருப்பதாவது : ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமவுலியோ அல்லது அப்படக்குழுவைச் சேர்ந்த யாருமே இப்படத்தில் நடிக்க இதுவரை என்னை அணுகவில்லை. தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--