சினிமா நடிகைகள் சமூக வலைத்தளங்களை எதற்குப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ தங்களது உடல் அழகை வெளிப்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து அதைப் பதிவிடுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது.
எமி ஜாக்சன், சமந்தா, திஷா பதானி, ராய் லட்சுமி உள்ளிட்டோர் அதை அடிக்கடி செய்வார்கள்.
எமி ஜாக்சன் தாய்மை அடைந்த பின்னும் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா உடற்பயிற்சி புகைப்படங்களைக் கூட வெளியிடுவார்.
அவர்களது வரிசையில் புதிதாக பூஜா ஹெக்டேவும் சேர்ந்திருக்கிறார்.
தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருந்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக, அம்மணிக்கு பாலிவுட் பட வாய்ப்பு கதவை தட்டியுள்ளது.
ஏற்கனவே ஹவுஸ்ஃபுல் 4 என்ற ஹிந்தி படத்தில் நடித்து வரும் இவர். இந்த அப்டத்தை தொடர்ந்து " Mean Girls" என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் ஆகும். இந்த படத்தின் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம் பூஜா.
Tags
Pooja Hedge