இதுக்கெல்லாம் கெஞ்சிகிட்டு இருக்க முடியாது - மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் பாக்


உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். காரணம், இங்கிலாந்தின் பருவநிலை தெரியாமல் மழை காலத்தில் போட்டிகளை நடத்த திட்டமிட்ட ஐ.சி.சி தான்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுக்கொண்டிருகின்றன. இந்நிலையில், வரும் 16-ம் இந்தியா-பாக் மோதும் லீக் போட்டி நடக்கவுள்ளது. 

உலக மக்களை பொறுத்தவரை இது சாதரண லீக் போட்டி. ஆனால், இந்தியா - பாக் ரசிகர்களுக்கு இது தான் உலககோப்பை இறுதி போட்டி போன்றது. அந்த அளவுக்கு இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போது இரு நாட்டு ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

இந்நிலையில், பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மணி " எங்கள் அணியுடன் விளையாட வாருங்கள் என இந்திய அணியிடமோ மற்ற எந்த நாட்டு அணியிடமோ நாங்கள் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது" எனவும் இரு நாடுகளும் இணைந்து சுமூகமான முறையிலேயே போட்டிகள் நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.