செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்த ரங்கராஜ் பாண்டே என்னுடைய வாழ்கையில் ஒரே பாதையில் பணிப்பது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகின்றது.
வாழ்வின் பல முகங்களை பார்க்க விரும்புகிறேன் என கூறி பிரபல செய்தி சேனலில் இருந்து வெளியேறினார். தற்போது, சாணக்கியா டி.வி என்ற ஒரு யூ-ட்யூப் சேனலை தொடங்கி அதில் சமூக பிரச்னைகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், "நான் முதன் முதலில் சினிமாவில் நடிக்கிறேன்.
என்னுடைய கதாபாத்திரத்தின் வசனங்களை ஒரு நாள் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டு அதனை மனப்பாடம் செய்து கொள்வேன்.


