Six after Hitting Stumps..! - போல்டு ஆகிவிட்டு சிக்ஸ் பறந்த பந்து - ரசிகர்கள் ஆச்சரியம் - வீடியோ உள்ளே


நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதின.  இப்போட்டியானது  கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜோனி பைர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிய   இருவரும் பின்னர்  தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து  386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 387 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது பங்களாதேஷ். ஆனால், 48.5-ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே சேர்த்தது பங்களாதேஷ். 

ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர் ARCHER பங்களாதேஷ் வீரர் SOUMYA-வை நோக்கி வீசிய ஒரு பந்து கிளீன் போல்டானது. ஆனால், போல்ட் செய்து விட்டு பவுண்டரி லைனை தாண்டி விழுந்தது அந்த பந்து. இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post