2019 சிறந்த நடிகர், நடிகை - SIIMA விருதுகள் - நாமினேஷன் பட்டியல் - அதிகாரப்பூர்வ வெளியீடு..!


தென்னிந்திய சினிமா ரசிகர்களால் உற்று நோக்கப்படக்கூடிய, வருடா வருடம் நடக்கும் SIIMA விருதுகள் இந்த வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவிற்கான விருது விழா தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கும். 


அதே போல, இந்த வருடமும் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதில் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், நாமினேட் செய்வதும் ரசிகர்கள் தான். வெற்றியாளரை தேர்வு செய்வதும் ரசிகர்கள் தான்.

அந்த வகையில், கடந்த ஒன்றரை மாதமாக நாமினேஷன் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சிறந்த நடிகர்கள், நடிகைகளின் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல்  வெளியாகியுள்ளது. 

சிறந்த நடிகர்கள் (தமிழ்) : 
  1. விஜய் – சர்க்கார்
  2. விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
  3. ஜெயம் ரவி – அடங்கமறு
  4. தனுஷ் – வடசென்னை
  5. கார்த்தி – கடைக்குட்டி சிங்கம்
சிறந்த நடிகைகள் (தமிழ்) :
  1. ஜோதிகா – காற்றின் மொழி
  2. நயன்தாரா – கோலமாவு கோகிலா
  3. ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா
  4. திரிஷா – 96
  5. சமந்தா – இரும்புத்திரை