மங்காத்தா 2 படத்தை எடுக்க விடமாட்டேன் என்று நடிகர் பிரேம்ஜி ஒரு பேட்டி கூறியுள்ளார் .தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அஜித் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் இப்படத்தைச் சொல்லலாம்.
ஏனென்றால் மங்காத்தா முன் மங்காத்தா பின் என அஜித்தின் வளர்ச்சியைப் பிரித்து பார்த்தனர்.இந்நிலையில் இன்னும் அஜித் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இப்படத்தின் இரண்டம் பாகத்துக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாத வெங்கட் பிரபு, அஜித்தை கடந்த மாதம் சந்தித்தாக கூறி புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். அதைப் பார்த்த அஜித் ரசிகர்கள், ‘மங்காத்தா 2’ படம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் மங்காத்தா 2 படம் எடுக்கவிடமாட்டேன் என்று நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, 'மங்காத்தா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் என்னை போட்டு தள்ளிவிடுவார்கள். எனவே மங்காத்தா 2 படம் எடுத்தால் அதில் என்னால் நடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, உசுரே போனாலும் மங்காத்தா 2 படத்தை எடுக்க விடமாட்டேன். அதற்கு, பதிலாக வேறொரு கதையை எடுக்கும்படி என் அண்ணனிடம் கூறுவேன். அப்போது தான் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியும்' என்று கூறினார்.


